Wednesday, 15 December 2010




நந்தலாலா - கண்களில் நீர் குளம்


இந்த படத்த மட்டும் Oscar விருதுக்கு அனுப்பலனா வேற எந்த படத்தையும் அனுப்பகூடாது. ஆமா சொல்லிபுட்டேன். இளையராஜா தான் படத்தோட ஹீரோ. 'ஜெய் ஹோ...ஜெய் ஹோ' நு கத்தாம..ரொம்ப அனுபவிச்சு நம்மளையும் கிறங்கடிக்க வச்சுட்டார் மனுஷன் சாரி இசை கடவுள் அவர்.

நான் என்னத்த சொல்றது. படம் பார்த்துட்டு ரெண்டு நாள் தூக்கமே வரல. ரொம்ப கஷ்டப்பட்டு 'நகரம்' படம் பார்த்து நல்லா தூங்கிட்டேன்.
ரொம்ப சாதாரண கதை தான் ஆனா அத ரொம்ப அழகா சொல்லிஇருக்கார் நம்ம மிஸ்கின் (ஹீரோ) . படத்தோட செகண்ட் ஹீரோ சின்ன பையன். கலக்கி இருக்கான். மிஸ்கின் ஒரு மனநோயாளி. ஒரு நாள் தப்பிச்சு அம்மாவ பார்க்க போறாரு. வழில சின்ன பையனும் அவன் அம்மாவ தேடிட்டு போறான். ரெண்டு பேரும் ஒரு கட்டத்துல ஒன்னா சேந்து ஊருக்கு போறாங்க. ஆனா போக காசு இல்ல. அதனால வழில வர கார் , லாரி, பைக் , மொபெட் இப்படி எல்லார்கிட்டேயும் லிப்ட் கேட்டு போறாங்க. போற வழில நடக்கற மற்றும் பார்க்கற ஒரு ஒரு விஷயமும் நம்மள யோசிக்க மட்டும் இல்ல கண் கலங்கவும் வைக்கும். ரொம்ப யதார்த்தமா சில விஷயங்கள பளிச்சுன்னு சொல்லிருக்கார் Myskin .
அந்த சின்ன பையன் அவன் அம்மாவை பார்த்து ஒரு தடவ முத்தம் கொடுக்கணும்னு தேட ... மிஸ்கின் என்னடானா அவங்க அம்மா பார்த்து பளார்னு அரயனும்னு தேடறாரு.

கடைசீல rendu பேரூம் அம்மாவை பார்பாங்களா இல்லையான்னு தோணும்போது மிஸ்கின் & ராஜா combination நம்மள கண் கலங்க வச்சுடறாங்க.


2 comments:

  1. machi...did u know this is a remake of a japanese film called Kirujiro...:)

    Karthik

    ReplyDelete
  2. ohh...then this movie shld go for Aaandipatti award..not Aascar..

    ReplyDelete