என்னடா நம்மலால ஒரு நல்ல படம் கூட பார்க்க முடியாதான்னு தோனிற்றுகும்போது தான் மந்திர புன்னகை பார்த்தேன்.
படத்தோட இன்னொரு பிளஸ் பாயிண்ட் நம்ம தம்பி ராமய்யா. சூப்பரா பிச்சி ஒதறி இருக்கார். சந்தானம் & ராமய்யா timing காமெடி chanceless .
சரி கதை என்னனா....நம்ம கதிர் மேல மீனாக்ஷிக்கு காதல் வருது. ரெண்டு பேரும் நல்லா காதல் பண்ணிட்டு இருக்கும்போது .. கதிர்க்கு திடீர்னு மீனாக்ஷி மேல doubt வருது. அவங்கள ஒரு நாள் follow பண்ணி போகும்போது மேடம் ஸ்ரீகாந்த் (அட நம்ம ஸ்ரீகாந்த் தாங்க) கூட கில்மா பண்ணிட்டு இருக்காங்க. இதுக்கு இடைல கதிரோட அப்பா அப்போ அப்போ வந்து அட்வைஸ் பண்றாரு. கதிர் கிட்ட நல்லா பழக்கம் எதுவும் கடையாதுன்னு தெரிஞ்சும் ஒரு பொண்ணு லவ் பன்னுதுனா அதுவும் நல்ல பொன்னா இருக்காதுன்னு சொல்றாரு. நம்ம ஆளு சம கோவம் வந்து மீனாக்ஷிய அடிச்சி கொன்னுடறாரு. அட இதுதான் நம்ம நிறைய படத்துல பார்த்து இருகோம். ஆனா படத்தோட turning point இங்கதான் ஆரம்பிக்குது. நம்ம ஆளு ஒரு மனநோயாளி..சின்ன வயசுல அவங்க அம்மா அப்பாவோட friend கூட தப்பு பண்ண அதைபார்த்த அப்பா தற்கொலை பண்ணிக்கரறார்.
அப்பா இருக்கறா மாதிரி தானே கற்பனை பண்ணிக்கிட்டு இருக்கார். தன்னோட அம்மா போலவே மீனாக்ஷியும் இருப்பான்னு கற்பனையா நனைச்சு கற்பனையா அவங்கள கொலை பண்றாரு. பண்ணிட்டு போலீஸ் stationla surrender ஆகறாரு. இதுக்கு அப்புறம் வழக்கம் போல நம்ம மீனாக்ஷி இவரு எப்படி இருந்தாலும் பரவால நான் இவர்றதான் கல்யணம் பண்ணிப்பேன்னு சொல்றாங்க. கடைசீல ரெண்டு பேரூம் கல்யாணம் பண்ணிகிடாங்களா இல்லையானுதான் கிளைமாக்ஸ்.
படத்தோட highlight ஸ்க்ரீன்ப்ளே தான். உதாரணத்துக்கு ... அம்மாவ பத்தி..."நம்மல பெத்தததுதாலதான் அவ அம்மா ... இல்லனா அவள மலடீனுதான் சொல்லுவாங்க.."...."செல்போன் கண்டு புடிச்சதே...இருந்த எடதுலய்ருந்து பேசதான் ஆனா இவனுங்க கால் வந்தவொடனே தனியா பேச போயிடுரானுங்க..."
என்னக்கு படம் ரொம்ப புடிச்சு இருந்தது..என்னோட விமர்சனம் புடிச்சு இருந்துதுனா ... உங்க பொன்னான கருத்துகளை பதிவு பண்ணுங்க ..அப்படினெல்லாம் நான் சொல்லமாட்டேன்..கமெண்ட் பண்ணும்னு தோணிச்சுன்னா பண்ணுங்க அவளோதான் ...


super review machi...I saw the movie y day.....santhanam and thambi combination super...also the translation of the mesthri in english for Santhanam...he he
ReplyDeletealso the condoms scene....he he...poor santhanam's reactions was too good
Karthik