லண்டன் Tea கடை பெஞ்ச்
Friday, 13 January 2012
Sunday, 19 June 2011
ஆண்மை தவறேல் - நறு நறு முறுக்கு

ரொம்ப சாதாரண காதல் கதைதான்னு சொல்ல முடியாது...ஏன்னா படத்துல காதல், action , thriller , sentiment ...எல்லாமே கலந்து சொல்லிருக்கார் டைரக்டர்.
கதை: Just Dialல வேலை பார்கர பையனும் ... கால் செண்டர்ல வேலை பார்கர பொன்னும் லவ் பண்றாங்க...ரெண்டு பேறும் சின்ன வயசுலேருந்து லவ்...ஒரே வீட்ல குடி இருக்காங்க....சரி மேட்டர் என்னன்னா .... இந்த ரெண்டு பேறும் தினமும் meet பண்ற டைம் காலைல நாலு மணி - இடம் பெசன்ட் நகர் பீச். அது ஏன்னா நம்ம பொண்ணு duty முடிச்சுட்டு வர டைம் அது...
இப்படியே போற அவங்க வாழ்க்கைல ஒரு நாள் அந்த பொண்ண ஒரு கும்பல் kidnap பண்றாங்க ...இந்த இடத்துலேருந்து தான் படம் சூடு புடிக்குது...அந்த கும்பல் யார்னு கண்டிபுடிக்க நம்ம ஹீரோ கலம்புவார்னு நாம நனைச்ச ...ஒரு twist ...நம்ம ஆளு போலீஸ் ஸ்டேஷன்...crime branchன்னு அலைஞ்சு ...'ஒ'ன்னு அழ ...(நான் ஒரு நிமிஷம் படம் பெயர நனைச்சு பார்த்தேன்...)
இந்த டைம்ல வீடியோ evidence கடைக்க..நம்ம ஹீரோ அத எடுத்துகிட்டு ...சம்பத் (சென்னை 28 ) கிட்ட போறாரு (சம்பத் ex போலீஸ்). இங்க தான் படம் சூடு புடிக்குது ..ரெண்டு பேறும் அந்த பொண்ண தேட ஆரம்பிக்க ...பல அசிங்கங்கள் எப்புடி நடக்குதுன்னு நம்மக்கு ரொம்ப தெளிவா சொல்லி இருக்காங்க.....
போற வழியுல அந்த கும்பல் பிளான் போட்டு நாலு பொண்ணுகள தூக்கறது ..திக் திக்..அந்த பொண்ண கடத்தின கும்பல் கோவாவுக்கு கூட்டிட்டு போயி விக்க போறதா தெரிஞ்சு ...ரெண்டு பேரும் பொறப்பட..வழியுல சம்பத் சாக...நம்ம ஹீரோ 'ஒ'ன்னு மறுபடியும் அழ ....
கடைசீல அந்த கும்பல நம்ம ஆளு கண்டுபுடிசாரா இல்லையான்னு நான் சொல்ல வேண்டியது இல்ல. ஆனா கடைசியா வீரம் வந்து...சண்ட போட்டு...ரொம்ப முக்கியமா 'ஒ'ன்னு அழறத நிறுத்தி.தைரியம் வந்து ..அப்பாடா...அவளோதானான்னு நாம நனைக்கும் போது ஒரு twist. Climax as expected but interesting events.
நாம எல்லோரும் herosim மட்டுமே பார்த்து....பார்த்து அலுத்து போய்ட்டோம் ..இதுல நம்ம ஹீரோவுக்கு சாதாரன costumes ..நம்மல போல பேசறது ...நோ intro சாங்....ரொம்ப ஆறுதல்...முக்கியமா - நோ close up shots (சத்தியமா ஹீரோ பெயரு ஞாபகம் வரல - மூஞ்சி சுத்தம்)...
கன்னட பிரசாத் - ஞாபகம் இருக்கா? அதான் மேட்டர் புரோக்கர் - அந்த கேரக்டர் ..superb

ஹீரோ - L பாலாஜி (Cricketer) மாதிரி இருக்கார்ல ?
சன் டிவி - கலைஞர் டிவி டப்பா படங்கள எடுத்து ஒட்டும் போது...இந்த மாதிரி படம் ஒடுமாங்கர்து சந்தேகம் தான்.
இந்த படம் பார்த்தேன்னு என் அம்மா கிட்ட சொன்னா ..அவங்க கேட்ட கேள்வி : நீ எதுக்கு இந்த பேரு வச்ச படம் எல்லாம் பார்கர...?
நான்: !£$%^%&*@~#
Thursday, 10 February 2011
பதினாறு - தாறு மாறு

கடந்த சில வாரங்களா நான் வேலையா இருந்ததனால 'பொங்கல்' படங்களுக்கு விமர்சனம் பண்ண முடியல.சிவா மூஞ்சிய பார்த்தவுடன் இந்த படம் நல்ல இருக்கும்ன்னு பார்க்க ஆசைப்பட்டேன். அது சும்மா போன பல்லிய ஜெட்டிக்குள்ள விட்ட கதையா...அட நீங்க வேற ...
வழக்கமான கல்லூரி காதல் கதை தான். ஆனா டைரக்டர் 'Twist' என்ற பேர்ல என் கழுத்த அறுத்துபுட்டான். முதல்ல இந்த flashback சொல்றேன்னு ரெண்டு சின்ன பசங்க .. ஒரு பாட்டு..அவங்களக்குள்ள காதல் ..இதுக்கு கண்டிப்பா தடை போடணும்..பார்த்து பார்த்து tired ஆயிடுச்சு.

சிவா ஒரு பணக்கார பொண்ண காதலிகார். அந்த பொண்ணோட அம்மா ரெண்டு பேரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து 'பதினாறு' ன்னு ஒரு புத்தகத்த கொடுத்து படிக்க சொல்றாங்க. அதுல வர பதினாறு வயசு பையனும் பொன்னும் எல்லா தப்பும் பண்றாங்க. ஆனா அந்த பொண்ணு வீட்ல கல்யாணத்துக்கு ஒதுக்கல. ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓட பார்க்க .. மாட்ட..அந்த பொண்ணு பையன பார்த்து 'டேய் ...நீ போய் சம்பாதிச்சுட்டு என்னக்கு ஒரு சீல வாங்கிட்டு வா ..அது வரைக்கும் நான் உனக்காக நான் காத்திட்டு இருப்பேன்னு' சொல்ல ...பையன் ஒரு accident ல அடிபட...ஐயோ சாமி ..பதினாறு வசயசுல படிக்கறத விட்டுபோட்டு அந்த பொன்னும் பையனும்..கொடுமையின் உச்சம் (நமக்கு) ...

அந்த பையன் திரும்பி வரும் போது அந்து பொண்ணுக்கும் அவ மாமனுக்கும் கல்யாணம் ஆகபோறத பார்த்துட்டு அந்த பையன் ஊற விட்ட ஓடிட்றான்..
இத படிச்சுட்டு சிவா தன்னோட காதல மறந்துடுவார்னு நாம நனைச்சா அது தப்பு..அவரு அந்த பொண்ண தேடிட்டு அந்த கிராமத்துக்கு போறாரு..(அங்க ஒரு 'twist' )...அந்த பையன் யார்னு பார்த்த ..அது தான் சிவாவோட காதலியோட அப்பா....(அப்பப்பா)..
போதும்...இதுக்கு மேல உங்கள்ளுகே புரிஞ்சிருக்கும் ... நான் எவ்ளோ பொருமசாலீன்னு...
இதுல நான் கத்துகிட்ட பாடம் என்னன்னா...எவளோ அடிச்சாலும் நீ தாங்குவடா 'domex' பைய்யா..
சிவா அடிக்கற மொக்க காமெடிக்காக trailer மட்டும் பார்க்கலாம் !!!
Thursday, 13 January 2011
பாபு கணேஷ் ..யார் இவர்?

நான் படிச்ச விஷயம் என்னன்னா ..
G Babu Ganesh is playing 14 Avatars in the making of Nila Pappa – Hero, Director, Music Director, Cinematography, Story Writer, Screenplay Writer, Dialogue Writer, Lyricist, Editor, Producer, Stunt Choreographer, Dance Choreographer and Playback Singer and PRO .
படம் பேரு - நானே வருவேன்
என்னோட கேள்வி: நீ தான் ஏற்கனவே வந்து தொலைச்சிடீயே!
T .R in the making?
Friday, 24 December 2010
அய்யனார் - ஈசன்
இந்த ரெண்டு படத்த பத்தி சொல்ல ஒன்னும் பெரிசா இல்ல. படம் பார்த்த என்னோட டைம் தான் வீனாபோச்சு ...
அய்யனார் - அந்த அயன்னார் சாமி தான் இவங்கள தண்டிக்கணும்
ஈசன் - படம் ஒரு வாரம் கூட தியேட்டர்ல ஒடலைன்னு நண்பர் மூலமா கேள்வி பட்டேன்...நான் படம் பார்த்ததுக்கு அப்புறமா யோசீச்சேன்..இது எப்படி ரெண்டாவது ஷோ வரைக்கும் தாங்கிச்சுன்னு ...
அய்யனார் - அந்த அயன்னார் சாமி தான் இவங்கள தண்டிக்கணும்
ஈசன் - படம் ஒரு வாரம் கூட தியேட்டர்ல ஒடலைன்னு நண்பர் மூலமா கேள்வி பட்டேன்...நான் படம் பார்த்ததுக்கு அப்புறமா யோசீச்சேன்..இது எப்படி ரெண்டாவது ஷோ வரைக்கும் தாங்கிச்சுன்னு ...
Tuesday, 21 December 2010
விருதகிரி - பாதி வெந்த கறி

கேப்டன் படம் பார்கபோறம்னு நனைச்சாலே அவரோட சிவந்த கண்களும் (நா மொதல்ல அது க்ராபிக்ஸ்னு நனைச்சேன்..அப்புறம் தான் சினிமா நண்பர் ஒருத்தர் மூலமா தெரிஞ்சுது கேப்டன் cutting அடிச்சுட்டு தான் நடிப்பாராம்....அதனால தான் மனுஷன் பாகிஸ்தான் தீவிரவாதியல்லாம் தமிழ்ல பேசியே சாகிடிகறார் போல....)பக்கம் பக்கமா பேசற வசனம் தான் ஞாபகம் வரும்.
கேப்டன் தான் படத்தோட டைரக்டர். நான் வழகம்மா டைட்டில் எல்லாம் பார்க்கமாட்டேன். ஆனா இந்த படத்தோட டைட்டில் சாங் கண்டிப்பா பார்த்தே ஆகணும்னு பார்த்தேன். ஆறு டு ஏழு நிமஷம் கேப்டன் பத்தி தாறு மாறா புகழுந்து தள்றாங்க..அப்புறமா படத்துல கேப்டன் ஒரு வசனம் சொல்றாரு..எனக்கு பாராட்டுனா பிடிக்காது..இங்க இருக்குற சில தலைவர்கள் பாராட்டு பிடிக்காதுன்னு சொல்றாங்க ...அத சாக்கா வச்சு பாராட்டு நடத்தறாங்க....அவர் தன்ன தானே கலாய்ச்சுகரார்னு நினைக்கறேன்.
படம் ஆரம்பமே காமெடி தான்...கேப்டன் நம்ம சென்னை மாநகரத்து ACP . Scotland போலீஸ் training போன நம்ம கேப்டன் அவங்களுக்கு terroists சிலரை பிடிக்க ஹெல்ப் பண்றாரு. மனுஷன் வழக்கம் போல fight பண்ணி முடிச்சதுக்கு அப்புரம் ஒரு 5 நிமிஷம் scotland போலீஸ் கே training தராரு. அவர் இங்கிலீஷ் பேச அது milda backgroundla ஓடுது ...dubbing ல தமிழ்ல பேசறார்.
படத்தோட பெரிய ஆறுதல் என்னன்னா ....கேப்டன் சாருக்கு Heroine கடையாது...ஆனா ஒரு பொண்ணு அவர மாமா மாமான்னு கூப்பிடுது..அந்த பொண்ண நான் 'தரகு' படத்துல பார்த்து இருக்கேன்னு நனைக்கிறேன் ..
Scotland yard போலீஸ்க்கு parade எடுத்துட்டு இந்தியாவுக்கு திரும்பி வர நம்ம கேப்டன் சார reporters ஏர்போர்ட்ல மடிக்கி கேள்வி கேக்க..அவரு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாம ஒரு பத்து நிமிஷம்....அரசியல் பேசறாரு...ஒரு நிமிஷம் நான் கொழம்பிட்டேன்...இவரு AC யா இல்ல Assistant காமெடியனான்னு ...
உதராணத்துக்கு ...ரேபோர்ட்டர் கேள்வி...'எப்படி இவ்ளோ தைரியமா நீங்க செயல் படறீங்க'...அதுக்கு கேப்டன் பதில் ..'நான் யார பத்தியும் கவலை பட மாட்டேன்...என் பின்னாடி..தமிழக மக்கள் இருக்காங்க...தாய்மார்கள் ஆதரவு இருக்கு...' இத நம்ம கௌண்டமணி sytle ல சொல்லனும்னா ..'டேய் docomo தொப்பையா...நான் உன் கிட்ட என்ன கேட்டேன் ..இப்டீகா ஒருத்தன் போனானா இல்லையா...நீ என்ன சொல்லனும்...போனான் இல்ல...அவளோதான்..'
படத்தோட முதல் பாதி...ரொம்ப நல்ல இருந்துச்சு...வழக்கமான கேப்டன் படமா இருந்தாலும்...காமெடிக்கு பஞ்சமே இல்லாம அவரே தன்ன தானே கலாய்சுக்கறார். திருநங்கைகள (அரவாணிகள்) கடத்தி உடல் உறுப்புகளை விக்கற கும்பல் தலைவன பிடிக்கும் போது...சும்மா மூச்சு விடாம அவன் கிட்ட வசனம் பேசி ... சண்டை போடறாரு..(கோர்ட்-ல ஜட்ஜ் முன்னாடி வாதாடர மாதிரி இருந்துச்சு).
கேப்டன் எங்க போனாலும் மக்கள் அவர் கிட்ட தங்களோட கஷ்டத்த சொலி அழறாங்க...இவரு போலீஸ் ஆபீசர்-ஆ இல்ல அரசியல்வாதியான்னு புரியல....போலீஸ் DGP, கேப்டன் கிட்ட ரொம்ப ரகசியமான ஒரு விஷயத்த பத்தி பேசனும்னு சொல்லிட்டு ...இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா நாட்டுல நடக்கற கொடுமைய பத்தி பேசறார். டேய் கிட்னா நாயே....இது தான் ஊருக்கே தெரிஞ்ச விஷயமாச்சே...இதுல என்னடா ரகசியம்...
படத்தோட ரெண்டாவது பாதி முழுக்க action தான். மாமா மாமான்னு கேப்டன் கூட பாசமா இருந்த பொண்ணு ஆஸ்திரேலியாவுக்கு படிக்க போக..அதுக்கப்புறம்...'TAKEN' ஆங்கில பட ரீமேக் தான்...
கண்டிப்பா இந்த படத்த ஒரு வாட்டி பார்க்கலாம் ... கேப்டன் ரசிகர்களுக்கு நல்ல தீனீ....
Wednesday, 15 December 2010

நந்தலாலா - கண்களில் நீர் குளம்
இந்த படத்த மட்டும் Oscar விருதுக்கு அனுப்பலனா வேற எந்த படத்தையும் அனுப்பகூடாது. ஆமா சொல்லிபுட்டேன். இளையராஜா தான் படத்தோட ஹீரோ. 'ஜெய் ஹோ...ஜெய் ஹோ' நு கத்தாம..ரொம்ப அனுபவிச்சு நம்மளையும் கிறங்கடிக்க வச்சுட்டார் மனுஷன் சாரி இசை கடவுள் அவர்.
நான் என்னத்த சொல்றது. படம் பார்த்துட்டு ரெண்டு நாள் தூக்கமே வரல. ரொம்ப கஷ்டப்பட்டு 'நகரம்' படம் பார்த்து நல்லா தூங்கிட்டேன்.
ரொம்ப சாதாரண கதை தான் ஆனா அத ரொம்ப அழகா சொல்லிஇருக்கார் நம்ம மிஸ்கின் (ஹீரோ) . படத்தோட செகண்ட் ஹீரோ சின்ன பையன். கலக்கி இருக்கான். மிஸ்கின் ஒரு மனநோயாளி. ஒரு நாள் தப்பிச்சு அம்மாவ பார்க்க போறாரு. வழில சின்ன பையனும் அவன் அம்மாவ தேடிட்டு போறான். ரெண்டு பேரும் ஒரு கட்டத்துல ஒன்னா சேந்து ஊருக்கு போறாங்க. ஆனா போக காசு இல்ல. அதனால வழில வர கார் , லாரி, பைக் , மொபெட் இப்படி எல்லார்கிட்டேயும் லிப்ட் கேட்டு போறாங்க. போற வழில நடக்கற மற்றும் பார்க்கற ஒரு ஒரு விஷயமும் நம்மள யோசிக்க மட்டும் இல்ல கண் கலங்கவும் வைக்கும். ரொம்ப யதார்த்தமா சில விஷயங்கள பளிச்சுன்னு சொல்லிருக்கார் Myskin .
அந்த சின்ன பையன் அவன் அம்மாவை பார்த்து ஒரு தடவ முத்தம் கொடுக்கணும்னு தேட ... மிஸ்கின் என்னடானா அவங்க அம்மா பார்த்து பளார்னு அரயனும்னு தேடறாரு.
கடைசீல rendu பேரூம் அம்மாவை பார்பாங்களா இல்லையான்னு தோணும்போது மிஸ்கின் & ராஜா combination நம்மள கண் கலங்க வச்சுடறாங்க.
கடைசீல rendu பேரூம் அம்மாவை பார்பாங்களா இல்லையான்னு தோணும்போது மிஸ்கின் & ராஜா combination நம்மள கண் கலங்க வச்சுடறாங்க.
Friday, 3 December 2010
மந்திர புன்னகை - புல் போதை
என்னடா நம்மலால ஒரு நல்ல படம் கூட பார்க்க முடியாதான்னு தோனிற்றுகும்போது தான் மந்திர புன்னகை பார்த்தேன்.
படத்தோட இன்னொரு பிளஸ் பாயிண்ட் நம்ம தம்பி ராமய்யா. சூப்பரா பிச்சி ஒதறி இருக்கார். சந்தானம் & ராமய்யா timing காமெடி chanceless .
சரி கதை என்னனா....நம்ம கதிர் மேல மீனாக்ஷிக்கு காதல் வருது. ரெண்டு பேரும் நல்லா காதல் பண்ணிட்டு இருக்கும்போது .. கதிர்க்கு திடீர்னு மீனாக்ஷி மேல doubt வருது. அவங்கள ஒரு நாள் follow பண்ணி போகும்போது மேடம் ஸ்ரீகாந்த் (அட நம்ம ஸ்ரீகாந்த் தாங்க) கூட கில்மா பண்ணிட்டு இருக்காங்க. இதுக்கு இடைல கதிரோட அப்பா அப்போ அப்போ வந்து அட்வைஸ் பண்றாரு. கதிர் கிட்ட நல்லா பழக்கம் எதுவும் கடையாதுன்னு தெரிஞ்சும் ஒரு பொண்ணு லவ் பன்னுதுனா அதுவும் நல்ல பொன்னா இருக்காதுன்னு சொல்றாரு. நம்ம ஆளு சம கோவம் வந்து மீனாக்ஷிய அடிச்சி கொன்னுடறாரு. அட இதுதான் நம்ம நிறைய படத்துல பார்த்து இருகோம். ஆனா படத்தோட turning point இங்கதான் ஆரம்பிக்குது. நம்ம ஆளு ஒரு மனநோயாளி..சின்ன வயசுல அவங்க அம்மா அப்பாவோட friend கூட தப்பு பண்ண அதைபார்த்த அப்பா தற்கொலை பண்ணிக்கரறார்.
அப்பா இருக்கறா மாதிரி தானே கற்பனை பண்ணிக்கிட்டு இருக்கார். தன்னோட அம்மா போலவே மீனாக்ஷியும் இருப்பான்னு கற்பனையா நனைச்சு கற்பனையா அவங்கள கொலை பண்றாரு. பண்ணிட்டு போலீஸ் stationla surrender ஆகறாரு. இதுக்கு அப்புறம் வழக்கம் போல நம்ம மீனாக்ஷி இவரு எப்படி இருந்தாலும் பரவால நான் இவர்றதான் கல்யணம் பண்ணிப்பேன்னு சொல்றாங்க. கடைசீல ரெண்டு பேரூம் கல்யாணம் பண்ணிகிடாங்களா இல்லையானுதான் கிளைமாக்ஸ்.
படத்தோட highlight ஸ்க்ரீன்ப்ளே தான். உதாரணத்துக்கு ... அம்மாவ பத்தி..."நம்மல பெத்தததுதாலதான் அவ அம்மா ... இல்லனா அவள மலடீனுதான் சொல்லுவாங்க.."...."செல்போன் கண்டு புடிச்சதே...இருந்த எடதுலய்ருந்து பேசதான் ஆனா இவனுங்க கால் வந்தவொடனே தனியா பேச போயிடுரானுங்க..."
என்னக்கு படம் ரொம்ப புடிச்சு இருந்தது..என்னோட விமர்சனம் புடிச்சு இருந்துதுனா ... உங்க பொன்னான கருத்துகளை பதிவு பண்ணுங்க ..அப்படினெல்லாம் நான் சொல்லமாட்டேன்..கமெண்ட் பண்ணும்னு தோணிச்சுன்னா பண்ணுங்க அவளோதான் ...
படத்தோட இன்னொரு பிளஸ் பாயிண்ட் நம்ம தம்பி ராமய்யா. சூப்பரா பிச்சி ஒதறி இருக்கார். சந்தானம் & ராமய்யா timing காமெடி chanceless .
சரி கதை என்னனா....நம்ம கதிர் மேல மீனாக்ஷிக்கு காதல் வருது. ரெண்டு பேரும் நல்லா காதல் பண்ணிட்டு இருக்கும்போது .. கதிர்க்கு திடீர்னு மீனாக்ஷி மேல doubt வருது. அவங்கள ஒரு நாள் follow பண்ணி போகும்போது மேடம் ஸ்ரீகாந்த் (அட நம்ம ஸ்ரீகாந்த் தாங்க) கூட கில்மா பண்ணிட்டு இருக்காங்க. இதுக்கு இடைல கதிரோட அப்பா அப்போ அப்போ வந்து அட்வைஸ் பண்றாரு. கதிர் கிட்ட நல்லா பழக்கம் எதுவும் கடையாதுன்னு தெரிஞ்சும் ஒரு பொண்ணு லவ் பன்னுதுனா அதுவும் நல்ல பொன்னா இருக்காதுன்னு சொல்றாரு. நம்ம ஆளு சம கோவம் வந்து மீனாக்ஷிய அடிச்சி கொன்னுடறாரு. அட இதுதான் நம்ம நிறைய படத்துல பார்த்து இருகோம். ஆனா படத்தோட turning point இங்கதான் ஆரம்பிக்குது. நம்ம ஆளு ஒரு மனநோயாளி..சின்ன வயசுல அவங்க அம்மா அப்பாவோட friend கூட தப்பு பண்ண அதைபார்த்த அப்பா தற்கொலை பண்ணிக்கரறார்.
அப்பா இருக்கறா மாதிரி தானே கற்பனை பண்ணிக்கிட்டு இருக்கார். தன்னோட அம்மா போலவே மீனாக்ஷியும் இருப்பான்னு கற்பனையா நனைச்சு கற்பனையா அவங்கள கொலை பண்றாரு. பண்ணிட்டு போலீஸ் stationla surrender ஆகறாரு. இதுக்கு அப்புறம் வழக்கம் போல நம்ம மீனாக்ஷி இவரு எப்படி இருந்தாலும் பரவால நான் இவர்றதான் கல்யணம் பண்ணிப்பேன்னு சொல்றாங்க. கடைசீல ரெண்டு பேரூம் கல்யாணம் பண்ணிகிடாங்களா இல்லையானுதான் கிளைமாக்ஸ்.
படத்தோட highlight ஸ்க்ரீன்ப்ளே தான். உதாரணத்துக்கு ... அம்மாவ பத்தி..."நம்மல பெத்தததுதாலதான் அவ அம்மா ... இல்லனா அவள மலடீனுதான் சொல்லுவாங்க.."...."செல்போன் கண்டு புடிச்சதே...இருந்த எடதுலய்ருந்து பேசதான் ஆனா இவனுங்க கால் வந்தவொடனே தனியா பேச போயிடுரானுங்க..."
என்னக்கு படம் ரொம்ப புடிச்சு இருந்தது..என்னோட விமர்சனம் புடிச்சு இருந்துதுனா ... உங்க பொன்னான கருத்துகளை பதிவு பண்ணுங்க ..அப்படினெல்லாம் நான் சொல்லமாட்டேன்..கமெண்ட் பண்ணும்னு தோணிச்சுன்னா பண்ணுங்க அவளோதான் ...
Wednesday, 1 December 2010
கனிமொழி - ஆஸ்கார் பட வரிசையில் ஒரு தமிழ் படம்
உங்க வீட்டுல சாககடக்கற தாத்தா பாட்டி இல்ல உங்க உங்களுக்கு எதிறிங்க யாருக்காவது நல்லது பண்ணனும்னு நனசீங்கன்னா கனிமொழி படம் டிக்கெட் ப்ரீயா வாங்கி குடுங்க. பாதி படம் பார்க்கும்போதே அவங்களே தற்கொலை பண்ணிப்பாங்க இல்லனா டைரக்டர் வீடு தேடி போய் கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போய்டுவாங்க...சத்தியமா சொல்றேன் நான் இருந்த கடுப்புக்கு ஏன்டா இந்த படத்த பார்த்தேன்னு நொந்து noodles ஆயிட்டேன் ...
ஒரு cutting போட்டுட்டு தான் படம் பார்க்க உட்கார்தேன் ... ஆனா புல் அடிச்சருக்கலாமோனு தோநீச்சு... நான் இந்த படம் பார்க்கணும்னு ஆசை பாடத்துக்கு producer SONA ஆன்டி அப்படீங்கற ஒரே ஒரு காரணம் தான்.
என்ன கதை...நம்ம ஜெய் ஒரு Viscom ஸ்டுடென்ட். காலனி பசங்களோட தினமும் football , கிரிக்கெட் விளையாடும்போது ஒரு figure கிராஸ் பண்ணுது. பொண்ணு பேரு ஊரு அட்ரஸ் எதுவும் தெரியாது ஆனா லவ் பண்றாரு. லவ் கருமத்த பண்ண வேண்டாம்னு நான் சொல்லலை ஆனா அவ கூட பேசறா மாதிரி கற்பனை பண்ணிக்கிட்டு டைரில எழுத ...climaxla லவ் propose பண்ண போகும்போது அந்த பொண்ணு வேறஒருத்தர லவ் பண்றது தெரியவருது.
இந்த கதை கேட்க நல்லாத்தான் இருக்குது ஆனா screenplay & direction தான் கேவலம். ஜெய் ஏன் இப்படி பட்ட படத்துல எல்லாம் நடிகரார்னு புரியல. நேத்து படத்தோட டைரக்டர் interview பார்த்தேன். மனுஷன் கூச்சமே இல்லாம பொய் சொல்றாரு. படத்தோட பிளஸ் பாயிண்ட் screenplay தானாம். ரொம்ப philosopical லா சொல்லிருகாறாம். மவனே இதுக்காகவே உன்ன கோடம்பாக்கம் வந்து காரி துப்புவேன்.
சத்தியமா சொல்றேன் இத எழுதும் போது கூட அசிங்க அசிங்க maa திட்ட தோணுது. வடிவேல் ஸ்டைல்ல சொல்லனும்னா 'வேண்டாம் விட்ருங்க. என்னால முடியல'.
Wednesday, 24 November 2010
நகரம் மறுபக்கம் - Exit எந்த பக்கம்...

இந்த படம் ரிலீஸ் ஆகறதுக்கு முனாடிலய்ர்ந்தே சம பில்ட் up . சுந்தர் C ரொம்ப வருஷம் கழிச்சு டைரக்ட் பண்ண படம். சுந்தர் C & குஷ்பூ interview சன் நியூஸ் சேனல் ல பார்த்தேன். ரெண்டு பேரூம் ரொம்ப நல்ல படம், சீன் பி சீன் ரசிச்சு ரசிச்சு டைரக்ட் & ஸ்க்ரீன் ப்ளே பண்ணி இருக்கோம் நாங்க. அத உண்மைன்னு நம்பி தாங்க இந்த படத்த பார்த்தேன். ஆனா விதி ..... சரி படத்துக்கு போவோம் ....
ஒன்னும் புதுசா சொல்றதுக்கு இல்ல. வழக்கம்போல ரௌடி நல்லவனா மாற try பண்ற கதை தான். சுந்தர் C நடிச்ச தலைநகரம் பார்ட் 2 மாதிரி இருக்குது இந்த படம். அதுல செத்து போன சுந்தர் க இதுல திரும்பி உயிரோட வரா மாதிரி காமிசுட்ருந்தா கூட நல்லா இருந்துற்கும்.
பொதுவா சுந்தர் C படம் நாலே பாக்கு கலர் மண்டயோட தான் வருவாரு ஆனா ஒரு changeக்கு இந்த படத்துல சாதாரணமா வராரு. நம்ம கண்ணுக்கு அதுவே பெரிய ஆறுதல். முதல் சீன்லயே ஹீரோவ யாரோ குத்திடிறாங்க. அதுலேருந்து flashback ஆரம்பிக்குது. பொதுவா நான் மொக்க படம் நிறைய பார்ப்பேன். ஆனா இந்த படம் ஆரம்பிச்சு 30 நிமிஷதுலய்யே நான் தூங்கிட்டேன் சாரி சுந்தர் c என்ன தூங்க வச்சுட்டாரு. ஒரு பெருமைக்காக சொல்லைலைங்க ....வாடா (சுந்தர் c நடிச்ச படம்) படத்த 5 வாட்டி பார்த்தவங்க நான். என்னடா இவன் ஒரு பீத்தகலைன்னு நனைச்சுடாதீங்க..படத்துல வடிவேல் காமெடி தாங்க முடியல ...அவரு பக்கத்துல உக்காந்து கிச்சு கிச்சு மூட்டினஆ கூட சிரிப்பு வராது... Heroine பெயரு ஞாபகம் வரல ... ஆனா நல்ல பண்ணிஇருக்காங்க....இண்டர்வல் அப்புரம் படம் நல்லா இருக்கும்னு நனைச்சு, தூக்கம் வராம இருக்க ஒரு கப் சூப் குடிச்சுட்டு பார்க்க உட்கார்ந்தேன்...ஒரு சூப் வேஸ்ட் ஆனது தான் மிச்சம் .... தூக்கமும் போச்சு சூப் பும் போச்சு....
கால் செண்டர்ல வேலை பார்கறவங்க weekend ல தூக்கம் வராம ரொம்ப கஷ்டமா இருந்தா கண்டிப்பா இந்த படம் பார்க்கணும்....
Subscribe to:
Comments (Atom)

