Thursday, 10 February 2011

பதினாறு - தாறு மாறு



கடந்த சில வாரங்களா நான் வேலையா இருந்ததனால 'பொங்கல்' படங்களுக்கு விமர்சனம் பண்ண முடியல.சிவா மூஞ்சிய பார்த்தவுடன் இந்த படம் நல்ல இருக்கும்ன்னு பார்க்க ஆசைப்பட்டேன். அது சும்மா போன பல்லிய ஜெட்டிக்குள்ள விட்ட கதையா...அட நீங்க வேற ...


வழக்கமான கல்லூரி காதல் கதை தான். ஆனா டைரக்டர் 'Twist' என்ற பேர்ல என் கழுத்த அறுத்துபுட்டான். முதல்ல இந்த flashback சொல்றேன்னு ரெண்டு சின்ன பசங்க .. ஒரு பாட்டு..அவங்களக்குள்ள காதல் ..இதுக்கு கண்டிப்பா தடை போடணும்..பார்த்து பார்த்து tired ஆயிடுச்சு.




சிவா ஒரு பணக்கார பொண்ண காதலிகார். அந்த பொண்ணோட அம்மா ரெண்டு பேரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து 'பதினாறு' ன்னு ஒரு புத்தகத்த கொடுத்து படிக்க சொல்றாங்க. அதுல வர பதினாறு வயசு பையனும் பொன்னும் எல்லா தப்பும் பண்றாங்க. ஆனா அந்த பொண்ணு வீட்ல கல்யாணத்துக்கு ஒதுக்கல. ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓட பார்க்க .. மாட்ட..அந்த பொண்ணு பையன பார்த்து 'டேய் ...நீ போய் சம்பாதிச்சுட்டு என்னக்கு ஒரு சீல வாங்கிட்டு வா ..அது வரைக்கும் நான் உனக்காக நான் காத்திட்டு இருப்பேன்னு' சொல்ல ...பையன் ஒரு accident ல அடிபட...ஐயோ சாமி ..பதினாறு வசயசுல படிக்கறத விட்டுபோட்டு அந்த பொன்னும் பையனும்..கொடுமையின் உச்சம் (நமக்கு) ...




அந்த பையன் திரும்பி வரும் போது அந்து பொண்ணுக்கும் அவ மாமனுக்கும் கல்யாணம் ஆகபோறத பார்த்துட்டு அந்த பையன் ஊற விட்ட ஓடிட்றான்..

இத படிச்சுட்டு சிவா தன்னோட காதல மறந்துடுவார்னு நாம நனைச்சா அது தப்பு..அவரு அந்த பொண்ண தேடிட்டு அந்த கிராமத்துக்கு போறாரு..(அங்க ஒரு 'twist' )...அந்த பையன் யார்னு பார்த்த ..அது தான் சிவாவோட காதலியோட அப்பா....(அப்பப்பா)..

போதும்...இதுக்கு மேல உங்கள்ளுகே புரிஞ்சிருக்கும் ... நான் எவ்ளோ பொருமசாலீன்னு...

இதுல நான் கத்துகிட்ட பாடம் என்னன்னா...எவளோ அடிச்சாலும் நீ தாங்குவடா 'domex' பைய்யா..

சிவா அடிக்கற மொக்க காமெடிக்காக trailer மட்டும் பார்க்கலாம் !!!